0 0
Read Time:3 Minute, 10 Second

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று, அம்மனின் பக்தரான அபிராமிபட்டர், வழிபட வந்த சோழமன்னரிடம், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார்.

சோழ மன்னர் பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்று அபிராமி பட்டரிடம் கூறினார். இதனையடுத்து, அபிராமி பட்டர், எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அம்மனை நினைத்து, அபிராமி அந்தாதியை பாடினார், 100-கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும், ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது, 79-வது பாடல் பாடும்போது, அம்மன் நேரில் தோன்றி தனது காதில் அணிந்திருந்த தோட்டை வீசி எறிந்து, முழுநிலவை தோன்றச்செய்து, அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.

அதன்படி, தை அமாவாசையான அம்மன் முன் பட்டரின் சிலை அமைக்கப்பட்டு, ஓதுவார்கள் ஒவ்வொரு பாடலாக பாடினர். ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 79 பாடலின் முடிவில், நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு, 100-பாடல்கள் பாடி நிறைவுசெய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தருமபுரம் ஆதீனம் 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அம்மாவாசையொட்டி 14-ஆம் ஆண்டு பக்தர்கள் திருக்கடையூர் ஆனைக்குளம் ஸ்ரீ காளிஸ்வரர் கோவிலிருந்து பக்தர்கள் 1008 பால்குடம் ஏந்தி அபிராமி அம்மன் கோவிலில் வளம் வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருக்கடையூர் அபிராமி அம்மன் சேவைக்குழு சார்பில் ஆண்டுதோறும் தை அம்மாவாசை அன்று 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %