புதுச்சேரியில் இருந்து புதுக்கோட் டைக்கு மினி லாரியில் கடத்தப் பட்ட 2 ஆயிரத்து 400 போலி மதுபாட்டில்களை கடலூரில் மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து ஒரு மினி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவுஇன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ் பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீஸார் நேற்று கடலூர் திருவந்திபுரம் அருகே வாகன சோதனையில் ஈடு பட்டனர். அந்த வழியாக வந்த ஒருமினி லாரியை மறித்து சோதனைசெய்தனர். அதில் காய்கறி பெட்டி கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளை அகற்றிவிட்டு சோதனை செய்த போது, 46 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரத்து 400 மதுபாட்டில்கள் இருந்தன. இதனையடுத்து லாரியை ஓட்டிவந்த அறந்தாங்கியைச் சேர்ந்தசரவணனிடம் (34) போலீஸார்விசாரணை நடத்தினர். விசாரணை யில், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக புதுக்கோட்டைக்கு மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.3.50 லட்சம் ஆகும்.
இதுகுறித்து கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி விஜயகுமார் கூறியது:
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் புதுச் சேரியில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவைகளில் தமிழ்நாடு டாஸ் மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில்கள் போலபோலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள் ளன. பாட்டில்கள் அனைத்திலும் ஒரே சீரியல் எண்கள் இருந்ததால் அவை போலி மதுபாட்டில்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மினிலாரி ஓட்டுநர்சரவணன் கைது செய்யப்பட்டுள் ளார். தொடர்ந்து அவரிடம் விசா ரணை நடத்தி வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருப்பதால் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய மதுபாட்டில்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.