தீவிர வாகன சோதனை:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதை தடுக்கும் வகையில் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை நகர் பகுதியில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என 3 தேர்தல் பறக்கும் படை குழுவினர் தினமும் சுழற்சி முறையில் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
நேற்று மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் பகுதியில் கூட்டுறவு சார்பதிவாளரும், தேர்தல் பறக்கும் படை அலுவலருமான நடராஜன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தணிக்கை செய்தனர். தணிக்கையின் போது போலீசார் சாருநாத், ராஜசேகர் ஆகியோர் இருந்தனர்.