தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் பேரூராட்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக 15 வார்டுகளிலும் திமுக தலைமையில் போட்டியிடுகின்றன.
இந்த பேரூராட்சியில் 11வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது இந்த பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக எஸ் நிரஞ்சனி தேவி போட்டியிடுகிறார். இவர் தனது போட்டியிடும் பகுதிகளில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தனக்கு கை சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டு வருகிறார்,
தான் வெற்றிபெற்றால் வார்டில் குடிநீர் சாக்கடை வசதி சாலை வசதி பள்ளிக்கூடங்கள் அமைத்தல் சுகாதார வசதி மக்களின் அன்றாட தேவைகள் அரசின் அனைத்து திட்டங்களையும் பொது மக்களுக்கு உடனடியாக சேரும் வண்ணம் உடனடியாக செயல்படுத்துவேன் என வாக்குறுதி அளித்து மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்து பொது மக்களின் அன்பை பெற்று வருகிறார்.
இவர் தனது வார்டில் நன்கு அறிமுகமானவர் என்பதால் வாக்கு சேகரிக்கும் போது பொதுமக்களின் வரவேற்பு மற்றும் ஆதரவும் உள்ளதாக தெரிகிறது.
வாக்கு சேகரிப்பின் போது உடன் காங்கிரஸ் திமுக தலைமையிலான கூட்டணி நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். இந்த வேட்பாளர் சுகந்திர போராட்ட வீரர் எம் எஸ் பி திலகரினா பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:ஜமால்,மயிலை