கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி கடந்த 31-ந் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதில் கடலூர் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 152 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் முதன்மை பயிற்றுநர்கள், மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் வாக்குப்பதிவு அலுவலர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.
புவனகிரி
இதேபோல் புவனகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்புக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி அருள் குமார் தலைமை தாங்கினார். மண்டல அலுவலர்கள் சிவனேசன், பிரகாஷ், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேல்முருகன், கனகசபை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பை புவனகிரி தாசில்தார் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயிற்சி வகுப்பில் 104 வாக்குப்பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
புதுப்பேட்டை
தொரப்பாடி பேரூராட்சியில் பணியாற்றும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வாக்குப்பதிவு எந்திரம் குறித்த செயல் விளக்க 2-ம் கட்ட பயிற்சி தேர்தல் மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் புதுப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் வைஜெயந்தி முன்னிலை வகித்தார்.
இதில் மண்டல அலுவலர் கணேசன், உதவியாளர் அம்சவேல் மற்றும் தேர்தல் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும், நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு அங்குள்ள தனியார் மண்டபத்திலும், பண்ருட்டி ஜான்டூயி மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் ராமசாமி செட்டியார் மேல்நிலைப்பள்ளி, விருத்தாசலம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, திட்டக்குடி ஸ்ரீஞானகுரு வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, வடலூர் அறிஞர் அண்ணா சமுதாயக்கூடம் மற்றும் அண்ணாமலைநகர் பேரூராட்சியில் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி, கெங்கைகொண்டான் சமுதாயக்கூடம்,
காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிள்ளை பேரூராட்சியில் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி, குறிஞ்சிப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, லால்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மங்கலம்பேட்டை பேரூராட்சி சமுதாயக்கூடம், மேல்பட்டாம்பாக்கம் சமுதாயக்கூடம், பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்ணாடம் தனியார் திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம். மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மேல்நிலைப்பள்ளி,
தொரப்பாடி பேரூராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
கலெக்டர் ஆலோசனை
இந்த நிலையில் அண்ணாமலை நகரில் உள்ள ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பார்வையிட்டு, அங்கிருந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.