0 0
Read Time:4 Minute, 18 Second

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா (வயது 63). கடந்த 10-ந் தேதி இவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வீடு புகுந்து லலிதா கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார்.

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், லலிதாவின் மருமகள் லதா என்ற மோகனசுந்தரி (30) என்பவருக்கு இந்த சங்கிலி பறிப்பில் தொடர்பு இருப்பது தெரிந்தது. போலீசார் மோகனசுந்தரியை பிடித்து விசாரித்தனர்.

போலீசாரிடம் அவர், “எனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் மாமியார் லலிதா தனது நகையை கொடுத்து உதவினார். அதன்பிறகு அடகு வைத்த தனது நகையை மீட்டுத் தரக்கோரி அடிக்கடி என்னிடம் கேட்டு தொல்லை கொடுத்ததால் அதை மீட்டு கொடுத்தேன். இதனால் மாமியாரின் நகையை அபகரிக்க நினைத்து என்னுடன் படித்த பள்ளி நண்பரான கார்த்திகேயன் (32) என்பவரை மாமியார் வீட்டுக்கு அனுப்பி நகையை பறித்ததாக” கூறினார்.

இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனசுந்தரியை கைது செய்து அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி ஜாமீனில் விடுதலை செய்தார். தலைமறைவான கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %