அண்ணாமலை பல்கலைக்கழத்திலிருந்து பணிநிரவலில் சென்ற ஊழியர்கள் பல்கலைக்கழக வளாசுத்தில் உள்ள நூலகம் அருகே நேற்று காலை திரண்டனர். பின்னர் அங்கு நடந்த கூட்டத்துக்கு ஊழியர் பன்னீர்செல்வம்தலைமை தாங்கினார். இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
2021-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்ததைப்போல் தற்போது நடைபெற நகர்ப்புற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பது.
முந்தய தமிழக அரசின் முறையற்ற பணிநிரவலால் பாதிக்கப்பட்டு, இன்றளவும் அதிலிருந்து மீள முடியாமல் உள்ள மாற்றுத் திறனாளி, பெண் ஊழியர்கள் என பணிநிரவல் ஊழியர்கள் சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 800 ஊழியர்களை மட்டுமா வது அவர்களின் ஒப்பந்த நிபந் தனைப்படி அண்ணாமலை பல்கலைக்கழக பணிக்கு அழைக்க வேண்டும். 4 ஆயிரத்திற்கு மேற் பட்ட ஊழியர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் அரசு துறைகளில் பணிபுரியும் நிலையில் அவர்களில் 800 ஊழியர் கள் தவிர்த்து மற்ற ஊழியர்கள் அனைவரையும் தற்போது பணிபுரியும் அரசு துறையிலேயே ஒப்படைப்பு செய்து அவர்களுக்கு பதவி உயர்வு போன்ற அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.
முந்தய தமிழக அரசின் முறையற்ற பணிநிரவலால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊழியர் களின் குடும்ப வாரிசுகளில் ஒரு வருக்கு குறைந்தபட்சம் ரூ.10ஆயி ரம் ஊதியத்திற்கு தற்காலிக பணியாவது வழங்கி, அக்குடும் பத்தின் வறுமையை போக்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை ஊர்வலமாக சென்று துணைவேந்தரிடம் அளித்தனர்.
நிருபர்:பாலாஜி, சிதம்பரம்