0 0
Read Time:2 Minute, 23 Second

கடந்த 11ஆம் தேதி சென்னை கீழ்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசினார். அவர், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், 6,ஆயிரத்து 43 பேருடைய இணையவழி கலந்தாய்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 76 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாகவும் ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 3 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன எனவும் தெரிவித்தார். மேலும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 136 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன என்றார். அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 6 பிசிஎஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 375 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மீதமுள்ள இடங்களுக்கு கடந்த 11ஆம் தேதி முதல் வரும் 13 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினர் தவிர்த்து ஏனைய பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைன் நடைபெற்றது.

இந்நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்படி 2021 – 2022 ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கப்படுகின்றன. இந்நிலையில் க்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் உணவுக் கூடங்களில் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், சுகாதாரத் துறை இயக்குநரகத்தின் அனுமதியின்றி விழாக்கள், கூட்டங்கள் நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %