கோள்கள் மூலம் பிராட்பேண்ட் இணைய சேவைகள் வழங்க,
எஸ்இஎஸ் என்ற ஐரோப்பிய நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
36,000 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள் மூலம் இந்தியா முழுவதும் அதி வேக பிராட்பேண்ட் இணைய சேவைகளை அளிக்க,
எஸ்இஎஸ் மற்றும் ஜியோ நிறுவனம் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளன. விநாடிக்கு 100 ஜி.பி
டேடாவை அளிக்கும் அதி வேக பிராட்பேண்ட் சேவைகளை, மலிவான விலையில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் இதற்கு தேவையான கேட்வே கட்டமைப்புகளை நிர்மாணிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.
பைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் பிராட்பேண்ட் சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வேறு எந்த நிறுவனமும் 100 GBPS வேகத்தில், பிராட்பேண்ட் இணைய சேவைகளை அளிக்க முடிந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது .