0 0
Read Time:3 Minute, 6 Second

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்நிஷியனாக பணிபுரிந்து வருபவர் மலர் கண்ணன். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்., இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மலர்கண்ணன் கடலூர், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேப்கள் வைத்திருக்கிறார்.. இவர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணிக்கு செல்வதால் லேப்களில் பெண்களை வேலைக்கு வைத்துள்ளார். இந்நிலையில், லேபிள் வேலைபார்க்கும் சில பெண்களிடம் இவர் காதலை கூறியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மனைவி சித்ரா அதிர்ச்சி அடைந்தார். கோபத்தில் மலர்க்கண்ணனை கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது..
இதற்கிடையில், சித்ராவிடம் வரதட்சணை வாங்கி வரும் படி மலர்கண்ணன் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் சித்ராவால் பெற்றோர்களிடம் இது சம்பவம் குறித்து கூற முடியாமல் மலர்க்கண்ணனின் கொடுமையை சாகிப்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மலர்கண்ணன் லேபிள் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் மலர்கண்ணன் என குறிப்பிட்டு இருந்துள்ளது. இதை அறிந்த சித்ரா இருவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதை உறுதி செய்தார்.

இது குறித்து கண்ணனிடம் சித்ரா கேட்டார். ஆனால், அதற்கு அவர் சரியாக பதில் சொல்லாமல் மழுப்பிஉள்ளார். மாறாக சித்ராவை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். திகைத்து போன சித்ரா என்ன செய்து என்று தெரியாமல் கடலூர் மகளிர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார்.. சித்ரா அளித்த புகாரின் பேரில் மலர்கண்ணன் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

தன் மீது அளிக்கப்பட்ட புகாரை அறிந்த மலர்கண்ணன் தலைமறைவுமானார். போலீசார் தலைமறைவான மலர்க்கண்ணனை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %