0 0
Read Time:7 Minute, 0 Second

உணவே மருந்து: கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைகள்?: கொய்யா பழத்தின் மருத்துவ குணங்கள்!

  • கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் பாதிப்பு தீர்ந்து விடும்.
  • உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பினை கரைத்து கொழுப்பினால் ஏற்படும் உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.
  • கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் அதன் வீரியம் குறைந்து நோய் தாக்கமும் குறையும்.
  • கொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதிறனாரும் கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.
  • கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் கொய்யா பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். கொய்யா பழத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான “போலிக் ஆசிட்” நிறைந்திருப்பதால் தாய்க்கும் வளரும் குழந்தைக்கும் அதிக நன்மையை தரும்.
  • அஜீரண கோளாறினால் பாதிப்படைந்தவர்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வர எளிதில் ஜீரண சக்தி ஏற்பட்டு வயிற்று உப்பசம் போன்றவை ஏற்படாமல் சரி செய்யும்.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல்:

இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கொய்யாப் பழம் குறைக்கிறது. இரத்தம் கடினமாவதைத் தடுத்து இரத்தத்தின் திரவத் தன்மையைப் பாதுகாக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது. நார்ச்சத்து இல்லாத உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது. இதன்மூலம் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்:

கொய்யாக்கள் செம்புக்கு (Copper) நல்ல ஆதாரமாக விளங்குகிறது. இதனால் ஹார்மோன் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிற்து. உடலில் உள்ள ஆற்றல் கட்டுப்பாடு மற்றும் வளர்சிதை மாற்றத்தில் தைராய்டு ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே கொய்யாவானது பல வழிகளில் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றது.

தோற்றத்தை மேம்படுத்துதல்:

கொய்யாப் பழங்களில் அதிக அளவில் சுருக்கங்களைக் கட்டுபடுத்தும் குணங்கள் (Astringent Properties) உள்ளன. அதிலும் குறிப்பாகக் கொய்யா இலைகள் மற்றும் பழுக்காத கொய்யாக் காய்களில் அதிக அளவில் இப்பண்புகள் உள்ளன. கொய்யாவானது தோலின் நிறத்தை உயர்த்துகிறது எனவே பழுக்காத கொய்யாக் காய் அல்லது கொய்யா இலையிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றினை தோலில் பூசி வரத் தோற்றம் மேம்படுவைதைக் காணலாம்.

ஸ்கர்வியைத் தடுத்தல்:

வைட்டமின் ‘சி’ யின் செறிவு அடிப்படையில் ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழம் முதன்மை பெறுகிறது. வைட்டமின் ‘சி’ யின் குறைபாடு காரணமாகத் தான் ஸ்கர்வி (Scurvy) நோய் ஏற்படுகிறது. இக்கொடிய நோயிலிருந்து விடுபட ஒரே தீர்வு சரியான அளவு வைட்டமின் ‘சி’ யினை உட்கொள்ள வேண்டும். அனவே ஆரஞ்சை ஒப்பிடும்போது நான்கு மடங்கு அதிக அளவு வைட்டமின் ‘சி’ கொய்யாவில் உள்ளது. எனவே கொய்யாவினை தினசரி உட்கொண்டு வந்தால் ஸ்கர்வி நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இருமல் மற்றும் சளி:

மற்ற பழங்களை ஒப்பிடும்போது கொய்யாப் பழத்தில் தான் வைட்டமின் ‘சி’ மற்றும் இரும்புச்சத்து அதிக அள்வில் உள்ளது. இவை இரண்டும் சளி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. பழுத்த அல்லது பழுக்காத கொய்யாவிலிருந்து எடுக்கப்படும் சாறு அல்லது கொய்யா இலைகளின் சாறு இவை இரண்டும் சளி மற்றும் இருமலிலிருந்து விடுபட மிகப்பெரிய அளவில் உதவுகிறது. மேலும் கொய்யாவானது சளியிலிருந்து முற்றிலும் விடுபடவும் சுவாச மண்டலம், தொண்டை மற்றும் நுரையீரலை சுத்தப்படுத்தவும் செய்கிறது.

மூளைக்கு நலம்:

கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 3’ மற்றும் வைட்டமின் ‘பி 6’ ஐக் கொண்டுள்ளது. இவை நயசின் மற்றும் பைரிடாக்சின் என்ற பெயர்களில் அழைக்கப்படுவது நாம் அறிந்ததே. மெலும் கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. மேலும் கொய்யாப் பழம் நரம்புகளுக்கு ஓய்வினை அளிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %