0 0
Read Time:4 Minute, 45 Second

உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருப்பதில் காலை உணவு முக்கிய பங்காற்றுகிறது. நாம் எவ்வளவு ஆரோக்கியமான உணவுகளை நாள் முழுவதும் தேர்ந்தெடுத்து சாப்பிட்டாலும், காலை உணவின் போது சாப்பிடும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நாளில் எந்த வேளை உணவைத் தவிர்த்தாலும், காலை உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது. மேலும் நாம் காலையில் சாப்பிடும் உணவுகளை ஆரோக்கியமானதாக தேர்ந்தெடுத்து சாப்பிடவும் வேண்டும்.

பல ஆய்வுகளின் படி, உடலில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தால், அது உடலில் பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் முதலில் தொப்பையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். நீங்கள் உங்கள் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், காலை உணவின் போது ஒருசில உணவுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அந்த உணவுகள் உடலில் கொழுப்புக்களை அதிகரித்து, உடல் எடையை இருமடங்கு அதிகரிக்கும். இப்போது அந்த உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

வெள்ளை பிரட் தற்போது பெரும்பாலான இந்திய வீடுகளில் காலை உணவாக பிரட் சாப்பிடப்படுகிறது. ஆனால் அதிகளவு பிரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியதை பாதிப்பதோடு மட்டுமின்றி, உடல் எடையையும் அதிகரிக்கும். இம்மாதிரியான சூழ்நிலையில், வெள்ளை பிரட் சாப்பிடுவதற்கு பதிலாக, ப்ரௌன் பிரட் சாப்பிட முயற்சிக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் பதப்படுத்தப்பட்ட உணவுகளானது பல முறை சமைக்கும் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள எண்ணெய், மசாலாக்கள், நெய் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே சிப்ஸ், பாப்கார்ன், உலர் பழங்கள், தின்பண்டங்கள் போன்றவற்றில் இருந்து விலகி இருங்கள்.

கேக், குக்கீஸ் கேக் மற்றும் குக்கீஸ் போன்றவை மைதா தவிர, நெய் மற்றும் க்ரீம்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஃபிட்டாக இருக்க நினைப்பவர்களுக்கு இது முற்றிலும் மோசமான உணவுப் பொருட்கள். இம்மாதிரியான உணவுகளை பகல் நேரத்தில் சாப்பிடுவதே ஆரோக்கியமற்றது. அதுவும் காலை உணவாக உட்கொண்டால், உடல் ஆரோக்கியம் படுமோசமாக பாதிக்கப்படும். எனவே இவற்றை ஒருபோதும் காலை உணவாக உண்ணாதீர்கள்.

நூடுல்ஸ் எப்போதாவது நூடுல்ஸ் சாப்பிடுவது நல்லது தான் என்றாலும், அதை ஆரோக்கியமான காலை உணவாக கருத முடியாது. எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்பவராக இருந்தால், காலை உணவாக நூடுல்ஸ் சாப்பிடாதீர்கள்.

பழச்சாறு பழச்சாறுகள் குடிப்பது நல்லது தான். ஆனால் கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகள் வாங்கிக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக வீட்டிலேயே பழச்சாறுகளைத் தயாரித்துக் குடிக்கலாம். ஆனால் பழச்சாறுகளை விட, பழமாக சாப்பிடுவதே நல்லது. அதுவும் காலை உணவாக பழங்களை சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பக்கோடா எப்போதும் காலை வேளையில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது நல்லதல்ல. பக்கோடா, கச்சோரி போன்ற எண்ணெயில் பொரித்த உணவுகளை காலை உணவாக ஒருபோதும் சாப்பிடாதீர்கள். ஏனெனில் அவை உடலில் கொழுப்புக்களை அதிகரித்து, உடல் பருமன் மற்றும் பிற நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %