சென்னை, புளியந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காலாவதியான குளிர்பானங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் சதீஷ்குமார் தலைமையில் இன்று புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலை பகுதியில் உள்ள பின்னி மில் மைதானத்தில் உள்ள குடோனில் ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த குடோனில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக பல்வேறு கம்பெனிகளின் குளிர்பானங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வு செய்தபோது அதில் ஆங்காங்கே காலாவதியான குளிர்பானங்களும் இருந்தன இதனையடுத்து அந்த குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு தறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குடோனுக்கு பக்கத்தில் மற்றொரு குடோன் இருப்பதை அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை திறந்து ஆய்வு செய்தனர். அப்போது அதில் காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் ஒட்டு மொத்தமாக சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் 2 குடோன்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து அந்த குடோனை நடத்தி வந்த. சென்னை டிரேடர்ஸ் உரிமையாளர் கலைமணி வயது 48 என்பவருக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய பதில் தருமாறு நோட்டீஸ் வழங்கினர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.
இது குறித்து ஆய்வு நடத்திய நியமன அலுவலர் சதீஷ் குமார் கூறுகையில் காலாவதியான குளிர்பானங்களை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் காலாவதியான பொருட்களை அந்த நிறுவனத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும், இல்லையென்றால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் உதவியோடு அதனை அழிக்க வேண்டும் தொடர்ந்து இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் குடோன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
, புளியந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.