தமிழகத்தில் நிலஅபகரிப்பு தொடர்பான வழக்குகளின் குளறுபடிகளுக்கும், பிரச்சனைகளுக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரே காரணம் என உச்சநீதிமன்றம் கடுமைகாட்டியுள்ளது.
நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நெடுநாட்களாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தனி நபருக்கு இடையிலான நில வழக்கு உச்சநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு ஒன்றில் முறையீட்டை ஏற்று, நில அபகரிப்புக்கு என ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த 782 வழக்குகளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இரு தனிநபர்களுக்கிடையிலான நிலப்பிரச்சனையில் அரசு தலையிடுவது ஏன் ? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதுமட்டுமல்லாது, நில அபகரிப்பு நீதிமன்றம் ஏற்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது ஏன் ? எனவும் நீதிபதிகள் வினவினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் விசாரணையில் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களும் நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடுவதாகவும், இதனால் தான் நிலஅபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நெடுநாட்களாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தனி நபருக்கு இடையிலான நில வழக்கு உச்சநீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான வழக்கு ஒன்றில் முறையீட்டை ஏற்று, நில அபகரிப்புக்கு என ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த 782 வழக்குகளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இரு தனிநபர்களுக்கிடையிலான நிலப்பிரச்சனையில் அரசு தலையிடுவது ஏன் ? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதுமட்டுமல்லாது, நில அபகரிப்பு நீதிமன்றம் ஏற்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது ஏன் ? எனவும் நீதிபதிகள் வினவினர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், நில அபகரிப்பு தொடர்பான பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் விசாரணையில் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களும் நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடுவதாகவும், இதனால் தான் நிலஅபகரிப்பு தொடர்பான வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதில் கருத்து கூறிய நீதிபதிகள், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க மட்டுமே நில அபகரிப்புக்கான சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெளிவுபடுத்தினர். மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கும், சிறப்பு நீதிமன்றத்துக்கும் வித்தியாசம் உள்ளது என கூறிய நீதிபதிகள், இதுகூடாவா உயர்நீதிமன்ற பதிவாளருக்கு தெரியவில்லை? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், நில அபகரிப்பு தொடர்பான ஒரு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து முடித்த நிலையில், அதே வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 782 நில அபகரிப்பு வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பிற நீதிமன்றங்களுக்கு மாற்றியுள்ளதாகவும் நீதிபதிகள் கூறினர்.
இந்த உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்? உங்களுக்குள்ளேயே பேசி முடித்து கொண்டீர்களா? இதுபோன்ற விசயங்கள் ஊழலுக்கு வழி வகுக்காதா ? எனவும் நீதிபதிகள் கடுமை காட்டினர்.
அப்போது வாதத்துக்கு இடையே பேசிய மனுதாரர் முத்துலட்சுமி தரப்பு வழக்கறிஞர் ராம்சங்கர், உச்சநீதிமன்றத்தின் பல உத்தரவுகளை உயர்நீதிமன்றமும், கீழமை நீதிமன்றங்களும் பின்பற்றுவது கிடையாது என குற்றஞ்சாட்டினார்.
அதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், நிலஅபகரிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பது காரணம் அவை சிறப்பு நீதிமன்றத்திலிருந்து பிற நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்தது தான் என்றும் இதற்கு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மட்டும் தான் காரணம் எனவும் கண்டனம் தெரிவித்தனர். விரிவான உத்தரவு பிறப்பிப்பதாற்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.