0 0
Read Time:2 Minute, 51 Second

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து பழையாறு, மடவாமேடு, தர்காஸ், கொட்டாய்மேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட 6 கிராமங்களை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்கள் 350 விசைப்படகு மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும் இத்துறைமுகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு மீன் மற்றும் உலர் கருவாடு ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பெய்த வரலாறு காணாத கனமழையால் கடலுக்கு சென்ற உபரிநீர் அடித்துவந்த மணல் திட்டுக்கள் பழையாறு துறைமுகத்தில் தேங்கி உள்ளது. இதனால் படகு தளத்தை 200 மீட்டர் வரை மணல் மூடியுள்ளது.

இதனால் படகை கொண்டு வரமுடியாமல் மீன்களை பக்கிங்காம் கால்வாய் பகுதியில் விசைப்படகில் பிடித்து வரப்படும் மீன்களை இறக்கி அங்கிருந்து பைபர் படகு மூலம் ஏலக்கூடத்திற்கு கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் போதிய இடவசதி இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக படகுகள் பக்கிங்காம் கால்வாயில் நிறுத்தப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் மீன் பிடிக்க செல்லும் போதும் அவசர காலங்களிலும் முன்னால் நிற்கும் படகுகளை எடுத்தால் மட்டுமே அடுத்தடுத்து படகுகளை எடுக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே 6 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க பழையாறு மீன்பிடி துறைமுகத்தை தூர்வாரி, படகு அணையும் தளத்தை 300 மீட்டர் தூரத்திற்கு சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %