உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ள மத்திய அரசு, தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சிறப்பு விமான மூலம் அழைத்து வந்துள்ளது. உக்ரைன் மீது ரஷிய தொடர்ந்து போர் தொடுத்து வருவதால் கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் நெருக்கடி தொடர்பாக உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் மோடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் 4 பேரை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவிற்கு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரண் ரிஜிஜு ஸ்லோவாக்கியாவிற்கும், ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்குச் செல்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் வி கே சிங் உக்ரைனின் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை கவனிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.