0 0
Read Time:2 Minute, 13 Second

மத்திய அரசின் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் மத்திய அரசின் பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கபிரியல், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சீனி.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாய விளைபொருட்கள், உணவுப் பொருட்கள், உரம், கியாஸ் ஆகியவற்றிற்கான மானியத்தை ரத்து செய்ததை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை குறைத்ததை கண்டித்தும், எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் மேகநாதன், இயற்கை விவசாயி ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %