0 0
Read Time:1 Minute, 17 Second

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பொது இடத்தில் வீச்சருவாள் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த சிறுமுளை கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜா. இவர் சில தினங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் பொது இடத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது இவரது நண்பர்கள் இவருக்கு வீச்சரிவாள் வழங்குகின்றனர்.

நண்பர்களுடன் சேர்ந்து முத்துராஜா கையில் வீச்சருவாள் உடன் கெத்தாக எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது.

இதனைப் பார்த்த திட்டக்குடி போலீசார் கையில் வீச்சருவாள் உடன் போஸ் கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய முத்துராஜாவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %