0 0
Read Time:2 Minute, 16 Second

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தப்பட்ட 4300 மதுபாட்டில்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரை கிராமமான தொடுவாய் மீனவ கிராமத்தில் பிரபல சாராய வியாபாரி கங்கா (வயது 47) என்பவருக்கு, காரைக்கால் மாநிலத்தை சேர்ந்த மது பாட்டில்கள் அடங்கிய அட்டை பெட்டிகள் லாரியில் வந்து இறங்குவதாக சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனை அறிந்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதையடுத்து மதுவிலக்கு போலீசார் லாரியில் இருந்து இறக்கப்பட்ட காரைக்கால் மாநிலத்தை சேர்ந்த 4300 மது பாட்டில்கள் அடங்கிய 90 அட்டை பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த மது பாட்டில்கள் அடங்கிய அட்டைபெட்டிகளை அதே லாரியில் ஏற்றிக்கொண்டு சீர்காழி மதுவிலக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராய வியாபாரி கங்காைவ கைது செய்தனர்.

பின்னர் தலைமறைவான லாரி டிரைவர் சீர்காழியை சேர்ந்த முகேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %