0 0
Read Time:2 Minute, 3 Second

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தனர்.

கூடுதல் சேமிப்பு மையம் திறக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் இருந்து துரிதமாக இயக்கம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். 1,500 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஒப்பந்த முறையில் பணிபுரியும் கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி திருவாரூர் விளமல் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஐ.என்.டி.யூ.சி. நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர் சங்கத்தின் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் இளவரி தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் பழனி, மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம், மண்டல கவுரவ தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல தலைவர் அம்பிகாபதி, மண்டல செயலாளர் பாண்டியன், மண்டல பொருளாளர் சங்கர நாராயணன், மாநில அமைப்பு செயலாளர் ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %