0 0
Read Time:1 Minute, 41 Second

சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவா், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் எந்த பொருட்களும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த பயணியின் நடை சற்று வித்யாசமாக இருந்ததால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அவரின் காலணிகளை கழற்றி சோதனையிட்டனா். ஆனால் அதில் ஏதும் இல்லை. இருப்பினும் சந்தேகம் தீராத அதிகாரிகள் அவருடைய இரண்டு கால்களையும் தூக்கிப் பார்த்தனா்.

அப்போது, கால்களின் அடிப்பாதங்களில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, தங்கப்பசை அடங்கிய சிறிய பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.

இதையடுத்து 12 லட்சம் மதிப்புடைய 240 கிராம் தங்கப்பசையை பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்மந்தப்பட்ட சென்னை பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %