உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச அளவிலான இரண்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் கிட்டதட்ட 12-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னரும் கூட தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் ரஷியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிராக ரஷ்யாவில் இருந்து சர்வதேச அளவிலான மிகப்பெரிய கணக்கியல் சேவை நிறுவனமான கே.பி.
எம்.ஜி (KPMG)மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் (PWC) நிறுவனங்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பு ரஷியாவிற்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால் சர்வதேச அளவில் மிகப்பெரிய கணக்கியல் சேவை நிறுவனமான கே.பி.
எம்.ஜி நிறுவனத்திற்கு ரஷியா மற்றும் பெலாரஸில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் ரஷியா மற்றும் பெலாரஸ் நாடுகளில் இருந்து வெளியேறுவதாக கே.பி.எம்.ஜி வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
இதைபோலவே, ரஷியாவில் 30 ஆண்டுகளாக உறவு வைத்திருந்த பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனமும் தனது உறவை முறித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு கிட்டதட்ட 3,700 பங்குதாரர்களும் மற்றும் ஊழியர்களும் ரஷியாவில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.