0 0
Read Time:2 Minute, 30 Second

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட வரி மட்டி பிடிக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

அதிராம்பட்டினம் கடல் பகுதி சேறு மற்றும் மணல் கலந்த பகுதியாகும். தற்போது வரி மட்டி சீசன் தொடங்கியதால் கழுத்தளவு உள்ள தண்ணீரில் இறங்கி மட்டி பிடிக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மட்டி நத்தை இனத்தை சேர்ந்தது. இவை வரி மட்டி, வாழி மட்டி, வழுக்கு மட்டிகள் என பலவகைகள் உண்டு.

அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராம பகுதிகளில் வசிக்கும் மீனவ பெண்கள் தினந்தோறும் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு வரி மட்டி ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையானது. தற்போது வரி மட்டி கிலோ ரூ.100- க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

வரிமட்டி ஏரிப்புறக்கரை கடலோர பகுதியில் பிடிபடுகின்றன. இது மருத்துவகுணம் கொண்டது. மூலம், நீண்ட நாட்களாக உள்ள இடுப்பு வலி, பெண்களுக்கு வரும் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. வலை போட்டு இதை பிடிக்க முடியாது.

சேற்றில் புதைந்து வாழும் தன்மை கொண்ட மட்டியை மீனவர்கள் அரிவலை கொண்டு குறைந்த ஆழம் உள்ள தண்ணீரில் மூழ்கி தான் பிடிக்கின்றனர். இதன் ஓடுகள் அழகு சாதனப்பொருட்கள், வர்ணம் பூச்சுகள் தயாரிக்க பயன்படுகிறது.

இதன் ஓடுகள் தரம்பிரிக்கப்பட்டு ராமேஸ்வரம், கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த வரி மட்டி மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை பிடிப்படும் என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %