சாத்தான் குளம் கொலை வழக்கில் ஜெயராஜிற்கு செயற்கை சிறுநீரக பை பொறுத்தியதாக செவிலியர் சாட்சி கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான
ஜெயராஜ் – பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை
விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர்தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய
ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட
9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலிய பணியாளரான அருணாசல பெருமாள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது கோவில்பட்டி கிளை சிறையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜை
அழைத்து வரும்போது உடல் முழுவதிலும் காயம் இருந்ததாகவும், காவல்துறையினர்
தாக்கியதில் காயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்ததாகவும் மேலும் சிறுநீர்
கழிக்க முடியாத அளவிற்கு காயம் இருந்ததால் செயற்கை சிறுநீர் பை
பொறுத்தியதாகவும் சாட்சியம் அளித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையானது வருகிற 15ஆம் தேதிக்கு வர வாய்ப்புள்ளது. இதனிடையே தனக்கு ஜாமீன் அளிக்க கோரி குற்றம்சாட்டப்பட்டு சிறையிலுள்ள முன்னாள் ஆய்வாளரான ஸ்ரீதர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.