0 0
Read Time:2 Minute, 5 Second

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதன் அடிப்படையில் குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக்குழு இருத்தல் அவசியமாகிறது.

இதன் மூலம் அனைத்து பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் பள்ளி மேலாண்மைக் குழு சார்ந்த விழிப்புணர்வினை நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாதவன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகனம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %