0 0
Read Time:2 Minute, 16 Second

பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை, அருகே மூவலூர் கிராமத்தில் தேவாரப்பாடல் பெற்ற மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்க சகாயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனை சவுந்தர்யநாயகி அம்மன் திருக்கல்யாணம் புரிந்த தளமாக விளங்கி வருகிறது.

மேலும் இத்தளத்தில் எழுந்தருளியுள்ள மார்க்க சகாயசாமியை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் வழிபட்ட தளமாகவும் இது விளங்கி வருகிறது. இந்த கோவிலில் சுவாமிக்கு வில்வ அர்ச்சனை செய்து அந்த வில்வத்தை தண்ணீரில் விட்டு பருகினால் இதய நோய் தீரும் என்பது ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம்நாள் சாமி-அம்மனுக்கு திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

இதனை முன்னிட்டு சாமியும்- அம்மனும் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் சீர்வரிசை எடுத்துவர வேதியர்கள் மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %