குத்தாலம், மார்ச்- 17;
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவாவடுதுறை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்து துறை சார்பில் குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில், வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோபி, ஊராட்சி மன்ற தலைவர் அர்ஷிதாபானு சாதிக், ஒன்றிய குழு உறுப்பினர் நாகலட்சுமி முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் குமரகுருபரன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மங்கை உமாமகேஸ்வரி சங்கர், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், குத்தாலம் ஒன்றிய குழு துணைத்தலைவர் முருகப்பா மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சாந்தி, குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், கிராம சுகாதார செவிலியர் ரேவதி மற்றும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செவிலியர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
இம்மருத்துவமுகாமில் சிறப்பு மருத்துவ அலுவலர்கள் வருகைதந்து ஸ்கேன், இசிஜி, பொது மருத்துவம், மகளிர், குழந்தைகள், எலும்பு முறிவு, காது -மூக்கு -தொண்டை, கண் பிரிவு, பல் பிரிவு, இயன்முறை, சிகிச்சை பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, இனானி, யோகா, நியூட்ரிசன் மற்றும் ரத்த பரிசோதனை உட்பட வட்டார பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவம் மருத்துவ குழுவினரால் பார்க்கப்பட்டது. அங்கன்வாடி சார்பாக காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் விளக்க படங்கள் மற்றும் பொருட்காட்சி வைக்கப்பட்டிருந்தனர்.
பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். மேலும் தானாக முன்வந்து தனது உடல் பரிசோதனையை செய்து கொண்டார். அதேபோல் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் இரண்டாவது தவணையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
மேலும் முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து இலவசமாக மருந்து- மாத்திரைகளில் வழங்கினர். பள்ளியில் படிக்கும் 12 வயது முதல் 14 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் தடுப்பூசி போடப்பட்டது.
முடிவில், திருவாவடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் பாலசந்தர் நன்றியுரையாற்றினார்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.