Read Time:1 Minute, 6 Second
சிதம்பரம், காவிரி மேலாண்மை வாரிய முடிவை மீறி மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் சாமி.நடராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் கற்பனை செல்வம், தட்சிணாமூர்த்தி, சரவணன், வாஞ்சிநாதன், மூர்த்தி, மகாலிங்கம், தர்மதுரை வாசுதேவன், ஜீவா, முனுசாமி, ஜாகிர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.