உக்ரைன் மீதான போரை நிறுத்தக் கோரி பிரான்ஸ் நாட்டில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
உக்ரைன் மீதான போரை நிறுத்தக் கோரி பிரான்ஸ் நாட்டில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மேற்கு நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கூடிய நூற்றுக்கணக்கான பொதுமக்கள், உக்ரைன் தேசியக் கொடிகளைக் கைகளில் ஏந்தி அமைதியை வலியுறுத்தி கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினர்.
ரஷ்யப் படைகள் தாக்குதல் காரணமாக உக்ரைனின் மரியுபோல் நகரம் வெறிச்சோடி காணப்படுகின்றது. ரஷ்ய ராணுவம் உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் பொதுமக்கள் குடியிருப்புகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தின.
இதனால் அச்சத்தில் பொதுமக்கள் நகரத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குத் தஞ்சம் புகுந்த நிலையில், மரியுபோல் முழுமையும் அமானுஷ்யமாகக் காட்சியளிக்கிறது. இதற்கு மேற்கு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.