முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது 2022-2023 ஆம் ஆண்டுக்கான முழுமையான நிதிநிலை அறிக்கை ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய சட்டமன்ற அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. காலை 10 மணி அளவில் தனது பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.
ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார். மேலும், நாளை காலை 10 மணி வரை சட்டமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்த பட்ஜெட் கூட்ததொடர் முடிவடைந்த பின்பு மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.