0 0
Read Time:4 Minute, 15 Second

தஞ்சை பெரிய கோவில் சோழன்சிலை அருகே இருந்த தலையாட்டி பொம்மை கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் அகற்றப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அதிகாரிகள் பார்வையிட வருவதாக கூறி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை பெரிய கோவில் சோழன்சிலை அருகே இருந்த தலையாட்டி பொம்மை கடைகள் மற்றும் குளிர்பான கடைகள் அகற்றப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அதிகாரிகள் பார்வையிட வருவதாக கூறி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை பெரியகோவில் பகுதியில் தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் வகையில் தலையாட்டி பொம்மைகள், பேன்சி கடைகள் உள்ளிட்ட என 33 கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கடைகள் அகற்றப்பட்டு பெரியகோவில் எதிரே இருந்த வாகன நிறுத்துமிடத்தில் போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னர் அங்கிருந்தும் அகற்றப்பட்டன. அதன் பின்னர் இங்கு கடைகள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு மாற்றுஇடம் ஒதுக்கப்படாததால் பெரும்பாலானோர் தஞ்சை சோழன்சிலை அருகே நடைபாதையில் கடைகளை அமைத்தனர். இங்கு தற்போது 25-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.

இங்கு தலையாட்டி பொம்மை கடைகள், இளநீர் கடைகள், கரும்பு ஜூஸ் கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் நேற்று காலை இந்த கடை இருந்த பகுதிக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், டெல்லியில் இருந்து ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் வந்து பணிகளை பார்வையிடுவதற்காக வருகை தருவதாகவும், உடனடியாக கடைகளை அகற்றுங்கள். அதிகாரிகள் பார்வையிட்டு சென்ற பின்னர் கடைகளை போட்டுக்கொள்ளுங்கள் என கூறினர்.

இதையடுத்து கடைகளை வைத்திருந்தவர்கள் உடனடியாக தலையாட்டி பொம்மை உள்ளிட்ட பொம்மைகளை மூட்டை கட்டினர். இதே போல் பழக்கடை வைத்திருந்தவர்கள் வாகனங்களை எடுத்து வந்து பழங்களை வேறு இடத்திற்கு ஏற்றி சென்றனர். கரும்பு ஜூஸ் கடை வைத்திருந்தவர்களும் வாகனத்தை எடுத்து வந்து கரும்பு பிழியும் எந்திரத்தை எடுத்துச்சென்றனர். இதர கடைக்காரர்கள் தள்ளுவண்டியில் இருந்த தங்கள் கடைகளை மூட்டை கட்டி தள்ளிக்கொண்டு சென்றனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பெரியகோவில் பகுதியில் பொம்மை கடைகள், போன்சி கடைகள் என 33 பேர் கடைகள் வைத்திருந்தோம். அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் சோழன் சிலை அருகே போடப்பட்டு இருந்த கடைகளை, ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் பார்வையிட வருவதால் அகற்றுமாறு கூறி உள்ளனர். அதன்படி கடைகளை நாங்கள் அகற்றி உள்ளோம். இருந்தாலும் எங்களுக்கு பெரியகோவில் அருகே நிரந்தரமாக கடை ஒதுக்கி கொடுத்து எங்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %