தரங்கம்பாடி, மார்ச்- 21;
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 19ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது பெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தருமபுர ஆதீன 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய தருமபுரத்திலிருந்து பாதயாத்திரையாக சனிக்கிழமை திருக்கடையூர் வந்தடைந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான உப கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள் கிழமை காலை நடைபெற்றது.
திருக்கடையூர் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வெள்ளை வாரண விநாயகர், ஸ்ரீ அமிர்த ரட்ச விநாயகர், ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் திருக்கடையூர் எல்லை தெய்வமான பிடாரி அம்மன் ஆலயம் எதிர்காலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை அமைக்கப்பட்டு அருள் பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயில் கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.