0 0
Read Time:5 Minute, 6 Second

25-வது நாளாக தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், இந்த 25 நாட்களில் ரஷ்யாவின் தாக்குதலில் சிக்கி 109 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைய கூடாது என்பதற்காக உக்ரைன் மீது கடந்த மாத தொடக்கத்தில் இருந்து போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. வான்வழி, தரைவழி என அனைத்து விதத்திலும் குண்டு மழையை பொழிந்து வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து உலக நாடுகள் பலவும் பொருளாதார தடைகள் வித்த்து வரும் வேளையில், உக்ரைனுக்கு ஆதரவாகவும் நிறைய உதவிகளை செய்து வருகிறது.

உக்ரைனும் பதிலுக்கு ரஷ்யாவின் படைகளை அழிக்க எதிர்த்து போரிட்டு வரும் நிலையில், அங்கு பாதிப்பானது மிகவும் ஆழமாக உள்ளது. நவீன ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், குடியிருப்புகளில் தாக்குதல் நடத்தி அந்நாடு போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாக ஐரேப்பிய நாடுகளும், உக்ரைனும் குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் உக்ரைன் – ரஷியா இடையேயான போர் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது ரஷியாவுக்கு சீனா ஆயுதங்களை வழங்கினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பைடன் எச்சரித்திருந்தார்.

ஆனால், இந்த விவகாரத்தில் சீனா எத்தகைய விளைவுகளை சந்திக்கும் என்பது குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. இந்த போரினால் 6 மில்லியன் உக்ரேனியர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

பல மில்லியன் மக்கள் பிற நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்திருக்கின்றனர். உக்ரேனில் ஆண்கள் அனைவரும் ரஷ்யாவை எதிர்த்து போரிட வேண்டும் என்பதால் பெண்களும், குழந்தைகளும் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ரஷியா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள மரியபோல் நகரில் இருந்து மட்டும் ஒரே நாட்டில் 4 ஆயிரத்து 972 பேர் வெளியேறியுள்ளனர்.

போரில் இதுவரை 109 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையங்கள், அனுமின் நிலைங்கள், ராணுவ கமெண்ட் மையங்கள், மின் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல மில்லியன் டாலர்கள் இழப்பும், பொதுமக்களின் உயிர்களும் சேதமடைந்தாலும், உக்ரைன் ஆயுதங்களை கைவிட தயாராக இல்லை. அதே நேரத்தில் போரை நிறுத்துவதற்கு பேச்சு வார்த்தை மட்டுமே தீர்வாகும் என இந்தியா உட்பட பல நாடுகளும் கோரிக்கை விடுத்து வரும் வேளையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியோ ரஷ்ய அதிபர் புதினை இரண்டாவது முறையாக பேச்சுவார்த்தைக்கு வரும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தீவிர சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கான நேரம் இது என தெரிவித்திருக்கிறார். ஜெலன்ஸ்கியின் வேண்டுகோளை ஏற்று புதின் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, மேற்கொண்டு இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %