மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமையாசிரியர் சீதாலட்சுமி வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி கவுசல்யா, நகரசபை உறுப்பினர் காந்திராஜா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சுந்தரி நன்றி கூறினார்.
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. திருவெண்காடு அருகே நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.
துணை தலைமையாசிரியை மணிமேகலை வரவேற்றார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி, துணைத் தலைவர் ராஜ்குமார், கிராம பொது நல சங்க தலைவர் அன்பு, வார்டு உறுப்பினர் முத்து, பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை தலைமையாசிரியை கனிமொழி நன்றி கூறினார்.
இதேபோல் கோனியம்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருநகரி அரசு உயர்நிலைப்பள்ளி, காவிரிப்பூம்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, வானகிரி மீனவர் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
குத்தாலம் அருகே அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அசிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி எழிலன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஜெயா முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் லலிதா வரவேற்றார். மேலாண்மை குழு நடத்துனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான மகேஷ், பள்ளி ஆசிரியர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குலுக்கல் முறையில் ஊக்கப்பரிசு மற்றும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் முல்லை, சாமிநாதன், குணசுந்தரி, அனுசுயா, மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி ஆசிரியர் பாலகுமார் நன்றி கூறினார்.
கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் சாருபாலா தலைமை தாங்கினார். ஆசிரியை அனுராதா வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசியர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள 94 பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.