0 0
Read Time:1 Minute, 44 Second

கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சிறுபாக்கத்தில் விருத்தாசலம்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் அந்த சரக்கு வாகனத்தில் 22 சாக்கு மூட்டைகளில் 1100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 49) என்பதும், அடரி, மாங்குளம், காஞ்சிராங்குளம், சிறுபாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதை கோழி தீவனத்திற்காக சேலம் மாவட்டத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன், சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %