திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் வழங்கிய சிவதரிசனம் நாட்டிய நாடக நிகழ்ச்சியில் அபிராமி அந்தாதி பாடலுக்கு பரதநாட்டியம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா இருபத்தி மூன்றாம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இருபத்தி ஏழாம் தேதி நடைபெற இருக்கும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல்வேறு இசை மற்றும் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் இருந்து வந்திருக்கும் கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். அதன் ஒரு பகுதியாக செல்வி சக்தி பிரியா முரளிதரன் குழுவினரின் இன்னிசை வாய்ப்பாட்டு கச்சேரியும், கருநாட லலித டாக்டர் ரஷா கார்த்திக் மற்றும் அவரது மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது அதனை அடுத்து, பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நட்ராஜ் வழங்கிய சிவ தரிசனம் என்ற நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபிராமி அந்தாதியின் பாடல்களுக்கு நர்த்தகி நடராஜ் அமைத்த நாட்டிய நாடகம் காண்போரை கவர்ந்தது.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.