0 0
Read Time:4 Minute, 49 Second

திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகம் சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளின் தங்க கொடிமரம், பரிவார தெய்வங்களின் சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள உலக பிரசித்திப்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் ஆயிரக்கணக்கான போலீசார் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் தலைமையில் பாதுகாப்பு பணி.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இக்கோயில் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் மற்றும் 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் சீரிய முயற்சியால் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெற்றது.120 வேத விற்பன்னர்கள் 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவை நடைபெற்றது.

கடந்த 23-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி தினமும் இரண்டுகால யாகாசாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் இன்று பூர்ணாஹீதியு ஆகி தீபாராதனை காண்பிக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தாளங்கள் வாசிக்க கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதியின் தங்க கொடிமரம், அம்பாள் சன்னதியின் தங்க கொடிமரம், மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி அம்பாள் காலசம்ஹாரமூர்த்தி வில்வவனநாதர் முருகன் விநாயகர் ஆகிய சன்னதிகளின் கருவறை விமானங்கள், ஐந்து நிலை ராஜ கோபுரங்கள் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், பாண்டிச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ் ராஜகுமார் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர். சுமார் 1200 போலீசார் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் கயல்விழி தலைமையில் 3 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %