0 0
Read Time:1 Minute, 41 Second

சீர்காழி அருகே சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம் சீரமைக்கப்படுமா என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

சீர்காழி அருகே, கன்னியாகுடி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையின் மூலம் கன்னியாகுடி கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ரேஷன் கடை கட்டிடம் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

மழைக்காலங்களில் கட்டிடத்தில் தண்ணீர் கசிவதால் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருக்கும் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் நனைந்து வீணாகி வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். அல்லது கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கன்னியாகுடி கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %