0 0
Read Time:2 Minute, 51 Second

திருவள்ளூரை, அடுத்த மணவாளநகரில் நேற்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி திருவள்ளூர் மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சி.ஐ.டி.யு.சி. திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அனைத்து தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலாஜி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தொழிலாளர்களின் உரிமையை பறிக்கின்ற வகையில் திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும், அமலாக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு நிதியம் உருவாக்க வேண்டும், விலைவாசி உயர்வைகட்டுப்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருத்தணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் காலி சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %