என் மகளுக்கு தமிழ் மொழி தெரியாது; சீக்கிரம் என் மகளை கண்டுபிடித்து கொடுங்கள் தாய் தகப்பன் கதறியபடி!! கோரிக்கை வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை பாடி அடுத்த மண்ணூர்பேட்டை பெரியார் நகர் பகுதியில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த கணவன் மனைவியான முகமத்.ஜீனத். இதே பகுதியில் ஸ்கிராப் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு 11 வயது மகளான காய்நாத் மட்டும் ஏழு பிள்ளைகள் இருக்கின்றனர்.
இவர்களது மூத்த மகள் காய்நாத். சனிக்கிழமை அன்று காலை பால் வாங்கி வருமாறு தாய் ஜீனத் மகளிடம் கூறியிருக்கிறார் தாய் கூறியதைக் கேட்டு சிறுமி வீட்டில் இருந்து பால் வாங்கி வருவதற்காக எதிரில் உள்ள கடைக்கு சென்று இருக்கிறார்.
நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பவில்லை இதனால் பயந்து போன சிறுமியின் தாய் ஜீனத் கடையின் உரிமையாளரிடம் கேட்டபொழுது உனது மகள் இங்க வரவில்லை எனக் கூறி இருக்கிறார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனக்கு சரியாக தமிழ் பேசவும் வராததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் சேர்ந்து சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் ஆகியும் சிறுமி தென்படாமல் போனதால் பயந்து போன சிறுமியின் தாய், தகப்பன் கொரட்டூர் காவல் நிலைத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக சிறுமி தேடி வருகின்றனர்.
சிறுமியின் தாய் தகப்பனிடம் நடத்திய விசாரணையில் இதற்கு முன்பதாகவே இரண்டு முறை சிறுமி காய்நாத் காணாமல் போனது தெரியவந்தது. இந்த நிலையில் ஏற்கனவே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள காப்பகத்தில் சிறுமி பாதுகாப்பாக இருந்தார் என்பதும் தெரியவந்த நிலையில் போலீசார் மீட்டு குழந்தை தாயிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இரண்டாவது முறையும் சிறுமி காணாமல் போனதால் போலீசார் தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடி வந்தனர். அதனைத் தொடர்ந்து வேலூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் குழந்தை இருப்பதை கண்டறிந்த போலீசார் குழந்தையை மீட்டு மறுபடியும் தாயிடம் ஒப்படைத்தனர்.
தற்பொழுதும் குழந்தை மூன்றாவது முறையாக காணவில்லை என சிறுமியின் தாய் தகப்பன் கொடுத்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை மற்றும் வேலூரில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காப்பகத்திலும் குழந்தை இருக்கிறதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அல்லது இரண்டு முறை குழந்தை காணாமல் போனதை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் நோட்டமிட்டு பெண் குழந்தையான காய்நாத் கடத்திச் சென்றிருக்கலாம் என பல கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கியிருக்கின்றனர்.
குழந்தை காணாமல் போன பகுதியில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால் சிறுமி எந்த திசையில் சென்றிருக்கிறார் என்பது குறித்து போலீசாருக்கு கண்டுபிடிப்பது சில சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சீக்கிரமாக குழந்தையை கண்டுபிடித்து கொடுங்கள் என்று ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் சிறுமியின் தாய் தகப்பன் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.