0 0
Read Time:3 Minute, 25 Second

மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரஷியா-உக்ரைன் போர் நீண்ட நாட்களாக நடந்தாலும், இப்போதுதான் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்த்தப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இது முற்றிலும் உண்மையல்ல.

கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடங்கல், போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை 2 வாரங்களாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதனால், கடந்த 8 நாட்களாக இங்கு விலை உயர்வு காணப்படுகிறது.

சர்வதேச விலைக்கு ஏற்ப நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள எண்ணெய் பத்திரங்கள் வினியோகிக்கப்பட்டன. அப்படி கொடுத்த பத்திரங்களுக்கு பொதுமக்கள் இப்போதும் பணம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

2026-ம் ஆண்டு வரை எண்ணெய் பத்திரங்களை மீட்பது நீடிக்கும் என்பதால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.

வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் எண்ணெய் பத்திரங்கள் வெளியிடப்பட்டதாக கூறுகிறார்கள். அப்போது, வெறும் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்புள்ள பத்திரங்கள்தான் வெளியிடப்பட்டன. இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்று அவர் கூறினார்.

டெல்லி அரசின் பட்ஜெட் குறித்து ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய்சிங் புகழ்ந்து பேசினார். பட்ஜெட் போடுவது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கற்றுக்கொள்ளுமாறு நிர்மலா சீதாராமனை கேட்டுக்கொண்டார்.

அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

போலீஸ், ராணுவம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கு டெல்லி பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது இல்லை. அவையெல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையில், பட்ஜெட் போடுவது எளிதான காரியம்தான்.

கெஜ்ரிவால் அரசை புகழ்ந்து முழுபக்க விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. எனக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, அந்த விளம்பர செலவுகளை காற்று மாசு பிரச்சினைக்கு பயன்படுத்துங்கள் என்று அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %