மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 நாட்கள் வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு(லெனினிஸ்டு) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 நாட்கள் வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு(லெனினிஸ்டு) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 நாட்கள் வேலை வழங்க வேண்டும். விலைவாசிக்கு ஏற்ப ஒரு நாள் கூலி ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் லூர்துசாமி, பால்ராஜ், ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நகரப் பூங்காவில் இருந்து ஊர்வலமாக சின்னக்கடை வீதி வந்தடைந்தனர்.