திருவெண்காடு அருகே நாங்கூரில் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு கோவிலின் மண்டபத்தில் வன் புருஷோத்தம நாயகியுடன், வன்புருஷோத்தம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் ஊஞ்சல் உற்சவம், மாலை மாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்த மேளதாளம் முழங்கிட பட்டாச்சாரியார்கள் மாங்கல்ய தாரணம் செய்துவைத்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதையடுத்து சாமி வீதி உலா நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை தர்மகர்த்தாக்கள் ரங்கநாதன், கண்ணன் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் செய்திருந்தனர்.