0 0
Read Time:1 Minute, 57 Second

மணல்மேட்டை அடுத்த, பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இருபிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வருகிற 14-ந் தேதி (வியாழக்கிழமை) அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது உருவப் படம் வைத்து மரியாதை செலுத்த போலீசாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் மயிலாடுதுறை கோட்டாட்சியர் தலைமையில் இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதற்கிடையே பட்டவர்த்தி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலதரப்பு மக்கள் வசிக்கும் தங்கள் பகுதியில் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதில் பலதரப்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் படம் வைத்து நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும் கூறி கருப்புக்கொடி ஏந்தி ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டவர்த்தி பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %