பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து சீர்காழியில் மோட்டார் சைக்கிள்-சிலிண்டருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர், மோட்டார்சைக்கிள் ஆகியவைகளுக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரியகுமார் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லட்சுமணன், வட்டார தலைவர்கள் பாலகுரு, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.சி அணி மாவட்ட தலைவர் வி. ஆர். ஏ.அன்பு, முன்னாள் வட்டாரத் தலைவர் அறிவுடைநம்பி ஆகியோர் பேசினர். தொடர்ந்து பெட்ரோல், டீசல், கியாஸ் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் செந்தில், அம்பேத்கர், ஸ்ரீதர், ரெங்கராஜ், முராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.