மன்னார் வளைகுடா மற்றும் தமிழக உள் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்ப சலனத்தாலும், சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
வளிமண்டல கீழடுக்குசுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால், சில இடங்களில் மழை பெய்யும் என்றும், மற்ற இடங்களில் இயல்பை விட வெப்பம்அதிகரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, டெல்டா மாவட்டங்களில், இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்றும், சென்னையில் இன்று அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.