”மக்களின் நம்பிக்கையை நிலைநாட்ட அரசியல்வாதிகளுடனான கள்ளக்கூட்டை காவல் அதிகாரிகள் கைவிட வேண்டும்.” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்ற டி.பி.கோலி நினைவு நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்து கொண்டார்.
‘ஜனநாயகம்- விசாரணை அமைப்புகளின் பங்கும், பொறுப்பும்’ என்ற தலைப்பில் பேசிய அவர், அரசியல்வாதிகளுடனான கள்ளக்கூட்டு, ஊழல் குற்றச்சாட்டு போன்றவற்றால் போலீஸ் அமைப்பு களங்கபட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், புதிய ஆட்சியாளர்கள் தொல்லை அளிப்பதாக போலீஸ் அதிகாரிகள் நீதிமன்றங்களை நாடுவதாக தெரிவித்த தலைமை நீதிபதி, அரசியல்வாதிகளுடன் கள்ளக்கூட்டு வைத்திருந்தால் அதற்கான விலையை தந்தாக வேண்டும் என்றார்.
சமூக நன்மதிப்பையும், மக்களின் நம்பிக்கையையும் நிலைநாட்ட அரசியல்வாதிகளுடனான கள்ளக்கூட்டை காவல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினார்.