0 0
Read Time:2 Minute, 13 Second

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாளை வாக்குப் பதிவை முன்னிட்டு வாக்கு என்னும் மையங்களுக்குச் செல்லும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி முகவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாத நிலையில் அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா கொரோனா தடுப்பூசி இரண்டு முறை செலுத்தி கொண்டுள்ளார் என்பதும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பாகவே அவருக்கு ஒரு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %