0 0
Read Time:2 Minute, 49 Second

அதிராம்பட்டினம் பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கியாஸ் சிலிண்டர் மாதத்துக்கு ஒருமுறையும், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றம் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் 12 நாட்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக தினமும் 40 காசுகள் முதல் 80 காசுகள் வரை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது. அதனால் தற்போது பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ109.53 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்று முன்தினம் ரூ.110.30 காசுக்கும், நேற்று 110.47 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. டீசல் ஒரு லிட்டர் நேற்று முன்தினம் ரூ.100.30 காசுக்கும், நேற்று 100.57காசுக்கும் விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் பெட்ரோல், டீசல் விலை சுமார் 40 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விடுமோ?என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மோட்டார் சைக்கிள், மினிவேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %