0 0
Read Time:2 Minute, 14 Second

மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் ஒரு பேக்கில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பேக்குகளை ரெயிலில் கொண்டுவந்த ஒரு பெண் உட்பட 3 பேரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் 3 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் திருச்சி தாராநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் சிவசங்கர் (வயது 25) அவரது மனைவி சத்யா (20), இவர்களது உறவினர் தியாகராஜன் மகன் சரபேஸ்வரர்(19) என்பதும், அவர்கள் 3 பேரும் திருச்சியிலிருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு கடலூர் செல்ல இருந்ததும் தெரியவந்தது.

பின்னர் அவர்கள் எடுத்து சென்ற 5 பைகளில் 23 பாக்கெட்டுகளில் இருந்த 46 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %